நடிகர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் கேள்வி.
இதுபற்றி ஒரு பிரஸ் மீட்டில் பேசிய கமல் 'நிச்சயம் மருதநாயகம் துவங்கும். அதில் நான் இருப்பது தான் சந்தேகம்' என தெரிவித்திருந்தார். அதனால் இந்த படத்தில் நடிகர் விக்ரம் தான் நடிக்கிறார் என செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது.
கமல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கமல் கம்பெனி தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அஜய் ஞானமுத்து படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். மருதநாயகம் படம் சில வருடங்கள் கழித்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.