Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகிலை முந்தியது கைதி! இரண்டாம் வார மொத்த வசூல் நிலவரத்தை அறிவித்த தியேட்டர்

பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. நேற்றொரு இரண்டு வாரங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது.

முதல் வாரத்தில் பிகில் வசூலித்த தொகையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே கைதி வசூல் செய்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் பிகில் வசூல் அப்படியே குறைந்துவிட்டது. கைதி படம் பிகிளை விட 5 சதவீதம் அதிகம் வசூலித்துள்ளது என்று ரோகினி திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்கள் லிஸ்டில் பிகில் இரண்டாம் இடம் தான் பிடித்துள்ளது. முதலிடத்தில் பேட்ட படம் உள்ளது. அதை பிகில் முந்துமா என்பது மூன்றாம் வார வசூல் பொறுத்து தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

இந்த வாரமும் எந்த பெரிய படமும் ரிலீஸ் இல்லை என்பதால் வரும் வாரமும் கைதி, பிகில் அதிகம் வசூலிக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.