Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படத்திற்காக திருமணத்தை தள்ளிவைத்த ரசிகர்! மனைவியுடன் முதல் காட்சி - இப்படியும் நடக்குமா

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நிலையில் இருப்பவர் நடிகர் மம்முட்டி. அவரின் படங்கள் ரிலீஸ் என்றால் தியேட்டர் பெரும் கூட்டம் கூடும். அவருக்கு திரளான ரசிகர்களும் இருக்கிறார். மம்முட்டி நடிப்பில் வரும் நவம்பர் 21 ம் தேதி மாமாங்கம் என்ற படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சித்திக், கனிகா, அனு சித்தாரா, உன்னி முகுந்தன் ஆகியோர் நடிக்க எம்.பத்மநாபன் படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி தீவிர ரசிகரான மேமோன். கொச்சியை சேர்ந்த இவருக்கு வரும் நவம்பர் 21 ல் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதனால் அவர் திருமணத்தால் மாமாங்கம் படத்தின் முதல் காட்சியை பார்ப்பது பாதிக்கப்படக்கூடாது என என்பதற்காக தன் திருமணத்தை அக்டோபர் 30 ல் நடத்தி முடித்து விட்டாராம்.

மேலும் தன் ஆதர்ச நடிகரான மம்முட்டியின் இந்த படத்தை தன் மனைவியுடன் முதல் நாள் முதல் காட்சி பார்க்க திட்டமிட்டுள்ளாராம்..