Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64 படத்தில் இணைந்த பிரபல சீரியல், சினிமா நடிகர்! புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்

அட்லீ இயக்கத்தில் வந்த பிகில் படத்தின் வெற்றிக்கு பின் விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

டெல்லியில் இதற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய்யின் நண்பர்களான சஞ்சய், ஸ்ரீமன், ஸ்ரீநாத், பிரேம் ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.

அடுத்தடுத்து பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து வரும் நேரத்தில் பிரபல சீரியல் சினிமா நடிகரும், நடிகை தேவதர்ஷிணியின் கணவருமான சேத்தன் தற்போது படத்தில் இணைந்துள்ளாராம்.

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.