Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது காமெடி துப்பறிவாளன்.. ஹிட் ஆன தெலுங்கு படத்தை ரீமேக் செய்யும் சந்தானம்

நடிகர் சந்தானம் தொடர்ந்து வித்யாசமான காமெடி கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தில்லுக்கு, துட்டு படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் வந்த ஏ1 படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து சந்தானம் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது அவர் தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Agent Sai Srinivas Athreya என்ற படத்தின் ரீமேக்கில் தான் சந்தானம் நடிக்கிறார். அதில் ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சி வைத்திருக்கும் ஹீரோ செய்யும் விஷயங்கள் பற்றி காமெடியாக காட்டியிருப்பார்கள். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடிக்க வஞ்சகர் உலகம் புகழ் இயக்குனர் மனோஜ் பீதா இயக்குகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.