Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் இப்படியா? சிம்பு பற்றி மாநாடு தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

நடிகர் சிம்பு நடிக்கவேண்டிய மாநாடு படம் ட்ராப் ஆகியதாக அறிவிக்கப்பட்டு அதன் பிறகு மீண்டும் அதில் சிம்பு நடிப்பதாக ஒப்புக்கொண்டதாக செய்திகள் வந்தது.

சிம்பு ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்த போதும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்று அவருடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். மாநாடு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார் அவர். இதனால் STR ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் அதன்பிறகு மீண்டும் சிம்புவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று சுரேஷ் காமாட்சி தற்போது அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதனால் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஆர்வம் காட்டவில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்.