Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி65 இயக்குனர் பற்றி பரவிய செய்தி உண்மையா? வந்தது விளக்கம்

நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து அவர் தடம் புகழ் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என செய்திகள் நேற்று பரவியது.

இது உண்மையா என விசாரித்ததில் மகிழ் திருமேனி விஜய்க்கு கதை சொன்னது உண்மைதான் என்ற விவரம் கிடைத்துள்ளது. ஆனால் அது நடந்தது 8 மாதங்களுக்கு முன்பு விஜய் தன் 64வது படத்திற்காக கதைகள் கேட்டுக்கொண்டிருந்தபோது நடந்த சந்திப்பு என கூறுகிறார்கள்.

நடிகர் உதயநிதி நடிப்பில் ஒரு புது படத்தை இயக்கும் முனைப்பில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார் மகிழ் திருமேனி. அதனால் அவர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை என நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.