Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்!

அஜித்தின் வலிமை படத்தினை எச்.வினோத் இயக்குகிறார். பூஜை சில வாரங்களுக்கு ,முன்பு நடந்தது. விரைவில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையை இந்த படத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அஜித் படத்தில் அவர் நிக்கிறாரா என்பது தயாரிப்பு விளக்கம் அளித்தால் தான் தெரியவரும்.

மெர்சல் படத்தில் விஜய் உடன் நடித்த வடிவேலு தற்போது இந்த செய்தி உண்மையானால் அஜித்துடன் நடிக்கிறார். 17 வருடங்களுக்க்கு முன்பு அஜித்தின் ராஜா படத்தில் வடிவேலு நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது தான் அவர்கள் இணைகிறார்கள்.