Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: இவன் தந்திரன் ரீமேக்கில் ஹீரோ இவர் தானாம்!

கௌதம் கார்த்தி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த 2017 ல் வெளியான படம் இவன் தந்திரன். ஆக்‌ஷன் திரில்லர் கதை தாங்கி படம் வெளியானது.

இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருந்தார். இவர் ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, பூமராங் படங்களையும் இயக்கியிருந்தார்.

அடுத்ததாக இவன் தந்திரன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளாராம். இதில் நடிகர் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸை ஹீரோவாக நடிக்கவைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.