Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தேதி, இடம் பற்றி கசிந்த தகவல்

முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் தர்பார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் ரஜினி டப்பிங் பேச ஆரம்பித்துள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை முடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குனர்.

இந்நிலையில் டிசம்பர் 7ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 3வது வாரத்தில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.