Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறி படத்தின் அசாம் மொழி ரீமேக்! பிரம்மாண்ட வசூல்.. 4 நாளில் இத்தனை கோடியா?

தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம் தெறி. அந்த படத்தின் கதையை அப்படியே தற்போது அசாமில் ரீமேக் செய்துள்ளனர். ஆனால் ஹீரோ போலீஸ் கதாபாத்திரத்திற்கு பதில் ரௌடி கதாபாத்திரத்திற்கு மாற்றியுள்ளனர்.

ரத்னாகர் என்கிற பெயரில் அக்டோபர் 11ம் தேதி வெளியான இந்த படம் வடகிழக்கு பகுதியில் உள்ள தியேட்டர்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

தற்போது வரை அந்த படம் 9 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுதான் அசாம் சினிமா வரலாற்றில் மிக அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.