Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் 3 வார சென்னை வசூல்! விஸ்வாசத்தை தொட இன்னும் இத்தனை லட்சம் தான் தேவை

பிகில் படம் மூன்று வாரங்களை தாண்டி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

போட்டிக்கு புதிதாக எந்த படமும் வெளியாகாத நிலையில் இன்று விஷாலின் ஆக்ஷன் படம் மட்டுமே ரிலீஸ் ஆகிறது. இருப்பினும் பிகிலுக்கு தொடர்ந்து பல காட்சிகள் நான்காவது வாரத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மூன்று வாரத்தில் சென்னையில் மாட்டும் 12.93 கோடி ருபாய் வசூலித்துள்ளது பிகில். இது விஸ்வாசம் படத்தின் வாழ்நாள் சென்னை வசூலை தொட இன்னும் 27 லட்சம் ருபாய் தேவை.

விஸ்வாசம் படத்தின் சென்னை மொத்த வசூல் 13.2 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பிகில் தாண்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.