Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை 2 என்ன ஆனது? இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி

தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவித்தார்கள். ஆனால் அதன்பிறகு அசுரன் படத்திற்காக இணைந்து அதை விட பெரிய வெற்றியை ருசித்துள்ளனர் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி.

அடுத்து வெற்றிமாறன் வெப் சீரிஸ், சூரியுடன் ஒரு படம் என தொடர்ந்து காலெண்டரை நிரப்பி வைத்துள்ளார். அதனால் வடசென்னை 2 வருமா வராதா என்கிற சந்தேகமே ரசிகர்களுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் இது பற்றி வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "வடசென்னை 2 பட்ஜெட் அதிகம், கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் விரைவில் எடுக்கலாம் என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.