Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி65 தயாரிப்பாளர் இவர்தானாம்! அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா?

விஜய் தனது 64வது படத்தை தயாரிக்கும் வாய்ப்பை நெருங்கிய உறவினர் ஒருவருக்கு கொடுத்துள்ளார். படத்தின் ஷூட்டிங்கும் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் தளபதி65 படத்தினை மகிழ் திருமேனி இயக்குகிறார் என செய்திகள் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என இயக்குனர் பதில் அளித்துவிட்டார்.

தற்போது தளபதி65 பற்றி பரவும் தகவல் என்னவென்றால் விஜய் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இடம் கொடுத்துள்ளாராம். இதனால் சொந்த தயாரிப்பில் படம் நடிக்கிறார் விஜய் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் தளபதி65 படத்திற்கு இயக்குனராக பேரரசுவை தேர்வு செய்ய எஸ்ஏசி விரும்புகிறார் என கூறப்படுகிறது. அதற்கு விஜய் ஒப்புக்கொள்வாரா என்பது தான் தற்போது உள்ள பெரிய கேள்விக்குறி.