Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி64 படத்தில் இணைந்த முன்னணி சீரியல் நடிகை

தளபதி விஜய்யின் பிகில் படம் பிரம்மாண்ட வெற்றியடைந்த பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் துவங்கி அடுத்து தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, பிரிகிடா உள்ளிட்ட பலர் நடிப்பதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் பகல் நிலவு சீரியல் புகழ் நடிகை சௌந்தர்யா நந்தகுமார் தளபதி64ல் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் பிரபல பாடகியும் கூட.

ஸ்கிரிப்டில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. விஜய்க்கு அருகில் நடிப்பதே எனக்கு கனவு நினைவானது போல உள்ளது என தெரிவித்துள்ளார்.