Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் அடுத்த படம் இவருடன்தானா? யாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை நடித்து முடித்து, டப்பிங்கும் பேசி முடித்துவிட்டார். படம் பொங்கல் ரிலீசுக்காக தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் அடுத்து சிவா இயக்கத்தில் தலைவர்168 படத்தில் அவர் நடிக்கிறார். மேலும் அதற்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் கவுதம் மேனனுக்கு தான் என சினிமா வட்டாரத்தில் பேச்சு உலவுகிறது.

LKG, கோமாளி உள்ளிட்ட படங்கள் தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாம். இந்த நிறுவனம் சமீபத்தில் நடத்திய வெற்றி விழாவில் ரஜினி படம் பற்றிய அறிவிப்பை வெளியிட முயற்சித்தார்களாம். ஆனால் ரஜினி தான் இப்போது வேண்டாம் சிவா படம் முடிந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டாராம்.