Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டார் தனுஷ்.. அசுரன் படத்தை பார்த்து மெர்சலான பாலிவுட் இயக்குனர்

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வந்த அசுரன் படம் மிக பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்றது.

தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் படத்தை பாராட்டினர். நடிகர் ஷாருக்கான் இயக்குனர் வெற்றிமாறனை அழைத்து பார்ட்டியது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி இயக்குனர் ஷமாஷ் என் சித்திக் ட்விட்டரில் அசுரன் படத்தை பற்றி பாராட்டி எழுதியுள்ளார். "சூப்பர்ஸ்டார் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்து முடித்தேன். Impressed. நல்ல கதையுடன் அவருடன் நிச்சயம் பணியாற்றுவேன்" என கூறியுள்ளார்.

தமன்னா மற்றும் நவாஸுதீன் சித்திக் நடித்த 'போலே சுடியான்' என்ற படத்தை இயக்கியவர் தான் ஷமாஷ் சித்திக் என்பது குறிப்பிடத்தக்கது.