Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் 30 கோடில எடுத்துடுவேன்.. விஜய்யை இயக்குவது பற்றி பேசிய டாப் இயக்குனர்

நடிகர் விஜய் பல முக்கிய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளார். ஆனால் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்ததில்லை. அவர்கள் கூட்டணி சேர்ந்த யோஹன் படமும் பூஜையோடு நின்றுவிட்டது .

இந்நிலையில் தற்போது கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய்யை இயக்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

"எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஒரு பெரிய படம் பண்ண. நான் அதிகம் செலவு வைக்க மாட்டேன். அவரது படங்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்கிட்ட ஒரு கதை இருக்கு. அண்ட் கதைக்குள்ள அந்த ஹீரோ நடிச்சா நல்ல இருக்கும். அவருக்கு என்ன suit ஆகும்னு நான் யோசித்து கதை எழுதுனா.. அது வருமானு எனக்கு தெரியல. அது தப்புனு எனக்கு தோணுது."

"அது தப்பா போகாதுனு எனக்கு நம்பிக்கை இருக்கு. பெரிசா செலவு பண்ணி நான் படம் எடுக்க மாட்டேன். அவர் 80-100 கோடி செலவு செய்து நடிக்கும் படங்களை என்னால் 30 கோடிக்கு பண்ண முடியும். என் மீது நம்பிக்கை வைத்து அவர் வந்தால்.. தீபாவளி அன்னைக்குதான்" என கூறியுள்ளார் கவுதம் மேனன்.