Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்க படத்தில் வில்லனாக கூட நடிப்பேன்..கதையே சொல்ல வேணாம்: பிரபல இயக்குனரிடம் கூறிய அஜித்

நடிகர் அஜித் பற்றி பல பிரபலங்கள் கூறி கேட்டிருப்போம். அவரை பலரும் ஜென்டில்மேன் என கூறுவதையும் பார்த்திருக்கிறோம்.

இதே கருத்தை தான் அஜித் பற்றி பேசும்போது கூறியுள்ளார் பிரபல இயக்குனர் விக்ரமன். ஒரு படத்தில் நடிப்பதற்காக அஜித்தை ஒருமுறை அணுகினாராம் விக்ரமன். 'உங்க படத்தில நான் வில்லனா கூட நடிக்கிறேன். எதுவுமே வேண்டாம்" என கூறி கதை கூட கேட்கமாட்டாராம்.

அதன்பிறகு விக்ரமனின் அசிஸ்டென்ட் ராஜகுமரன் இயக்கிய 'நீ வருவாய் என' என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக அணுகினாராம். அந்த சமயத்தில் முதுகில் ஆபரேஷன் செய்துகொண்டு ஓய்வில் இருந்துள்ளார் அஜித். அந்த படத்திற்கும் அஜித் கதை கூட கேட்காமல் உடனே ஓகே சொன்னாராம்.