Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலை செய்துகொண்ட முன்னணி நடிகர் கதையில் நடிக்கிறேனா? மாநகரம் சந்தீப் கிஷன் விளக்கம்

தமிழில் மாநகரம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளவர் சந்தீப் கிஷன். அவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தெனாலி ராமகிருஷ்ணா BABL படம் சுமாரான வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில் சந்தீப் கிஷன் பற்றி ஒரு செய்தி பரபரப்பாக பரவியது. முன்னணி நடிகராக இருந்து திடீரென தற்கொலை செய்துகொண்ட நடிகர் உதய் கிரனின் வாழ்க்கை படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார் என செய்தி வந்தது.

ஆனால் இதை ஒரு அறிக்கை வெளியிட்டு மறுத்துள்ளார் சந்தீப் கிஷன். என்னை யாரும் அந்த படத்திற்காக அணுகவில்லை. தற்போதைக்கு பயோபிக் கதையில் நடிக்கும் எண்ணம் இல்லை என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.