Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் ஒரு தமிழ் படம்

அடுத்த வருடம் பொங்கலுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பல படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழா நாட்களில் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வருவார்கள், அதனால் வசூல் அள்ளலாம் என போட்டிப்போட்டி பல படங்கள்வருகின்றன.

அந்த வகையில் வரும் 2020 பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் தர்பார், பிரபு தேவா நடிப்பில் பொன் மாணிக்கவேல் வெளியாக உள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து முடித்துள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது என்று போஸ்ட்டரில் அறிவித்துள்ளனர்.