Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 64 சாட்டிலைட் உரிமையை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் தளபதி 64. இப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது .

மேலும், தளபதி 64 படத்தில் பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

டெல்லியில் நடந்து வந்த ஷூட்டிங் முடிந்து தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் கர்நாடகாவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.