பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த முன்னணி வில்லன் நடிகர்

சினிமா by John Andrews
Topics : #Mani Ratnam

மணிரத்னம் அடுத்து இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இந்தியா சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என பல நடிகர்கள் இந்த மாதம் துவங்கவுள்ள ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் லால் அளித்தல் ஒரு பேட்டியில் தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார். இவர் ஏற்கனவே பல படங்களில் நெகட்டிவ் வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக தற்போது அவர் குதிரை ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்து வருகிறாராம்.