Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் பாலிவுட் படத்தில் இணையும் டாப் ஹீரோ?

தனுஷ் விரைவில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வந்தது. அதை தனுஷின் முதல் ஹிந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் தான் இயக்குகிறார்.

தனுசுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பரவும் லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான்.

இந்த படம் ரஞ்சனா படத்தின் தொடர்ச்சி இல்லை என்றாலும் அதற்க்கு ரஞ்சனா 2 என பெயர் வைக்க ஆனந்த் எல் ராய் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.