சிம்பு தான் ஒப்புக்கொண்ட மாநாடு படத்தின் ஷூட்டிங்கை துவங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார் என் புகார் எழுந்து, அதன்பிறகு அந்த படம் டிராப் ஆகும் நிலைமைக்கு வந்தது.
அதன் பிறகு சிம்புவின் அம்மா பஞ்சாயத்து பேசி தற்போது மீண்டும் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரியில் துவங்குகிறது.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் வி இசட் துறை அளித்துள்ள பேட்டியில் தான் அடுத்து சிம்புவுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அமீர் நடிப்பில் தான் இயக்கிவரும் நாற்காலி படத்தின் ஷூட்டிங்கிற்கு பிறகு இந்த படம் தான் என தெரிவித்துள்ளார் அவர். ஆனால் இது தொட்டி ஜெயா 2 இல்லை புதிய கதை என தெரிவித்துள்ளார் அவர்.