Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கை வரலாற்று படத்தில் பிரபல நடிகை, யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் தற்போது பல படங்கள் விளையாட்டுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ் அவர்களை மையப்படுத்தி அவரது வாழ்க்கை வரலாறை ஒரு படமாக எடுக்க போகிறார்களாம்.

இப்படத்திற்கு 'சபாஷ் மிதாலி' என்று டைட்டில் வைத்துள்ளனர். சபாஷ் மிதாலி படத்தை Rahul Dholakia என்பவர் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க பிங்க், badla, கேம் ஓவர், மிஷன் மங்கள் போன்ற படங்களில் நடித்திருந்த நடிகை டாப்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.