Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ பிளாப்.. அடுத்த படம் பற்றி பிரபாஸ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் ஹீரோவாக மிகப்பெரிய பட்ஜெட்டில் நடித்திருந்த சாஹா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவு சாதிக்கவில்லை.

அதிகம் செலவு செய்து பிரம்மாண்ட காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் பார்த்துவிட்டு பலரும் மோசமாகவே விமர்சித்தனர். இந்நிலையில் பிரபாஸின் அடுத்த படம் 'ஜான்' விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சாஹா ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு மீண்டும் அதே போன்ற ஒரு படத்தில் நடிக்கும் முடிவை பிரபாஸ் மாற்றிக்கொள்ள முடிவெடுத்துவிட்டார் என கூறப்படுகிறது. அதனால் பிரபாஸின் அடுத்த படம் 'ஜான்' கைவிடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெலுங்கு மீடியாவில் செய்திகள் பரவி வருகிறது.