Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் பிரபலம் கதிரின் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்!

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வந்த பிகில் படத்தில் நடித்திருந்தவர் கதிர். இவர் ஏற்கனவே கிருமி, சிகை, பரியேறும் பெருமாள் படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

அண்மையில் அவரின் நடிப்பில் ஜடா படமும் வெளியானது. அடுத்ததாக சர்பத் படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் காமெடி நடிகர் சூரியும், நடிகை ரகசியாவும் நடித்துள்ளனர்.

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் உதவியாளரான பிரபாகரன் படத்தை இயக்க சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதாம்.