Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதி, இந்தியன் 2 படங்களை தொடர்ந்து ரஜினி படத்தில் இணைந்த முக்கிய நடிகர்!

சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தின் படபூஜை இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் சிவா, நடிகை மீனா, குஷ்பூ, இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி என பலர் கலந்து கொண்டார்கள்.

சினிமாவில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் சில நிமிடங்களில் அழுத்தமான வேடத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவர் நடிகர் ஜார்ஜ் மரியான்.

தற்போது சூப்பர் ஸ்டாருடன் தலைவர் 168 படத்தில் நடிகர் ஜார்ஜ் மரியான் இணைந்துள்ளார். மதராசபட்டினம, கலகலப்பு, பொய் சொல்லப்போறோம் என பல படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் வெளியான கைதி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள அவர் தற்போது ரஜினியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.