Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம்! இங்கேயும் வந்துவிட்டார்களா? தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகளில் சில காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட்டது.

தற்போது கர்நாடகாவின் சிமோகா பகுதியில் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது. 40 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூடுவது வழக்கம். அதே போல தற்போது விஜய் தங்கியுள்ள ராயல் ஆர்சிட் ஹோட்டல் முன்பு பெரும் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.