Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்திற்காக மிகப்பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்

ரஜினிகாந்தின் அடுத்த படம் இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டாலும் அவர் படத்தின் பூஜைக்கு வரவில்லை.

ஏன் என விசாரித்தபோது அவர் தெலுங்கு படத்தில் பிசியாக இருப்பதால் அவரால் தலைவர்168 பூஜைக்கு வரமுடியவில்லை என தெரிந்தது.

மேலும் கீர்த்தி சுரேஷ் ரஜினி படத்திற்காக ஒரு மிக பிரம்மாண்டவாய்ப்பையும் நிராகரித்துள்ளார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் கீர்த்தி, ஆனால் தற்போது இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் துவங்கியுள்ளதால் அவர் எதாவது ஒரு படத்தினை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.