Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை

விஷால் நடிப்பில் சில வாரங்கள் முன்பு வெளியான ஆக்ஷன் பட,ம் மோசமான விமர்சனங்களைத்தான் சந்தித்தது. படமும் பெரிய அளவில் வசூல் ஈட்டவில்லை என கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க விஷால் அடுத்து இருமுகன் புகழ் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்போது துப்பறிவாளன் 2 ஷூட்டிங்கில் இருக்கும் அவர் அது முடிந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

ஆனந்த் ஷங்கர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ரீத்து வர்மா ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வந்துள்ளது. அவர் ஏற்கனவே விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

loading...