Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிங்க் தெலுங்கு ரீமேக்! ஹீரோயினாக தர்பார் பட நடிகை ஒப்பந்தம்?

ஹிந்தியில் டாப்ஸி மற்றும் அமிதாப் பச்சன் நடித்து சூப்பர்ஹிட் ஆன பிங்க் படத்தை அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தை தயாரித்த போனி கபூர் தற்போது இதே கதையை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார். அதில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தான் அஜித் நடித்த ரோலில் நடிக்கப்போகிறார்.

இந்நிலையில் ஹீரோயினாக பிரபல நடிகை நிவேதா தாமஸ் தேர்வாகியிருபதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர். தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்துள்ளார்.

அடுத்த வருடம் துவக்கத்தில் ஷூட்டிங் துவங்கவுள்ளது என்பதால், பிங்க் ரீமேக் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.