Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் முக்கிய அப்டேட்!

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. நல்ல வசூலும் பெற்று வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கிவரும் இதன் ஷூட்டிங் கன்னியாகுமரியில் துவங்கியது. நயன்தாரா பல கோவில்களுக்கு சென்ற புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

44 நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ள நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது 90 சதவீத ஷூட்டிங் முடிவுக்கு வந்திருக்கிறதாம்.

கன்னியாகுமரி ஷூட்டிங்கை முடித்துக்கொண்டுள்ள படக்குழு விரைவில் மீதமுள்ள 10 சதவீத படத்தினை சென்னையில் படமாக்கவுள்ளனர். அது ஒருவாரத்தில் முடிந்துவிடும் என RJ பாலாஜி கூறியுள்ளார்.

loading...