Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் எதிர்ப்புகளுக்கு நடுவிலும் அசத்தலான சாதனை! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம்

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். அவரின் படங்கள் ரிலீஸ் என்றால் சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இருக்காது.

அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சப்பாக். ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜே.என்.யூ பல்கலைக்கழக தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை அவர் சந்தித்ததால் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

இதற்கிடையிலும் படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இப்படம் ரூ 19.02 கோடி வசூலித்துள்ளது.

வெள்ளி - ரூ 4.77 கோடி

சனி - ரூ 6.90 கோடி

ஞாயிறு - ரூ 7.35 கோடி

மொத்தம் - ரூ 19.32 கோடி