Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தனதேவன் படம் நின்றது இதனால்தான்.. அமீர் கூறிய காரணம்

பல வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனர் அமீரின் இயக்கத்தில் சந்தனதேவன் என்கிற படம் துவங்கப்பட்டது. ஆனால் அது சில வாரங்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

அதற்கான காரணத்தை இயக்குனர் அமீர் இன்று நடந்த ஒரு விழாவில் கூறியுள்ளார். "நான் தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். பைனான்சியர் தான் பணம் கொடுத்தார். படம் நின்றபிறகு பல பைனான்சியர்கள் சந்தித்தார்கள். அவர்கள் எனக்கு ஒரு கண்டிஷன் போட்டார்கள்."

"நீங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என கூறினார்கள். இதற்கு உத்தரவாதம் அளித்தால் பணம் கொடுக்கிறோம் என்றார்கள். அது முடியாது. என்னை விற்று சினிமா எடுப்பது பைத்தியக்காரத்தனம். நான் நானாகவே இருப்பேன்" என் அமீர் கூறினார்.

loading...