Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ட்விட்டரில் மோதிக்கொள்ளும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.. பிரச்சனை துவங்கியது இப்படித்தான்

பாலிவுட் சினிமாவுக்கு அடுத்து இந்தியாவில் அதிக படங்கள் தயாரிப்பது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகள் தான். இவற்றில் ஒரு மொழியில் ஹிட் ஆன படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். பல தசாப்தங்களாக இது நடந்து வருகிறது.

இந்நிலையில் இதற்காக ட்விட்டரில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தற்போது மோதிக்கொண்டிருக்கின்றனர். விஜய்யின் குஷி படத்தையும் பவன் கல்யாணின் குஷி படத்தையும் ஒப்பிட்டு நேற்று ஒரு மீம் தெலுங்கு ரசிகர்கள் பதிவிட்டனர்.

இதனால் கோபமான விஜய் ரசிகர்கள் பதிலுக்கு மீம் பதிவிட தற்போது சண்டை முற்றி தமிழ் vs தெலுங்கு என இணையத்தில் சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்த பிரச்சனையில் நேற்று வெளியான தெலுங்கு அசுரன் ரீமேக் போஸ்டர் 'நாரப்பா' வையும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.