Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த படம் பற்றிய வதந்தி.. ஷாருக்கான் என்ன பதில் கூறியுள்ளார் பாருங்க

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஸிரோ படம் வெளிவந்து ஒருவருடத்திற்கும் மேல் ஆகிறது. அந்த படம் படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்து எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்காமல் உள்ளார் ஷாருக்.

அவர் தமிழ் இயக்குனர் அட்லீ உடன் ஒரு படத்தில் இணைகிறார் என தொடர்ந்து செய்திகள் வருகிறது. ஆனால் ஷாருக் அதை உறுதியாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ட்விட்டரில் இன்று ஷாருக் ரசிகர்ககளின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அடுத்த படம் என்ன, பல வதந்திகள் வருகிறது, நீங்களே அறிவித்துவிடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ஷாருக், "நான் அறிவித்துவிடுவேன், ஆனால் யார் நடிப்பது" என கிண்டலாக கேட்டுள்ளார்.