Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை பட வாய்ப்பு நழுவிய நிலையில் பிரசன்னாவுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு

நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள சூரரை போற்று படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கடுத்து சூர்யா இயக்குனர் ஹரியுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார்.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார் என நேற்று செய்திகள் வந்தது. இந்நிலையில் இன்று படத்தின் வில்லன் பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. நடிகர் பிரசன்னா இந்த படத்தின் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று கூறப்படுகிறது.

நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இறுதியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என நடிகர் பிரசன்னா கூறியிருந்தார். இந்த நிலையில் தான் சூர்யா பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

loading...