Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்திற்காக படக்குழு இந்த விசயத்தில் இவ்வளவு செலவழித்துள்ளதா?

கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் விஜய் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை செய்ததது தான். விஜய் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்தார். அவரின் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அதே வேளையில் அவரை நேற்று முன் தினம் வருமான வரித்துறை, மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சம்மன் கொடுத்து பாதியிலேயே அழைத்து வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடிகை ஆண்ட்ரியாவை கொண்டு இயக்குனர் லோகேஷ் படப்பிடிப்பை தொடர்ந்தார். நெய்வேலியில் இதன் படப்பிடிப்பு சமீப நாட்களாக நடைபெற்று வருகிறது. நிலக்கரி சுரங்கத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனால் படக்குழு அரசுக்கு சொந்தமான இந்த NLCநிறுவனத்திற்கு நாள் ஒன்றிற்கு வாடகையாக ரூ 25 ஆயிரம் செலுத்தி வருகிறதாம்.