Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் விஜய் மட்டும் தான் இதை செய்கிறார்..மற்ற நடிகர்களுக்கு பிரபலம் வைத்த கோரிக்கை

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் பட ஷூட்டிங் நெய்வேலியில் நடந்து வருகிறது. அதை எதிர்த்து ஒரு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இப்படி ஷூட்டிங்கிற்காக போராட்டம் அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என FEFSI தலைவர் செல்வமணி பேட்டி அளித்துள்ளார்.

"டாப் ஹீரோக்களில் விஜய் மட்டும் தான் தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்துகிறார். அஜித்தின் கடந்த 7 படங்கள் வெளி மாநிலங்களில் தான் ஷூட் செய்யப்பட்டது. ரஜினியும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்துகிறார்" என மேலும் அவர் கூறியுள்ளார்.

இப்படி வெளி மாநிலம் செல்வதால் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது, அதனால் இயக்குனர்கள் தமிழ்நாட்டிலேயே ஷூட்டிங் நடத்த முன்வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.