Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த வருடம் ஏப்ரல் மாத்துடன் முடிவடைந்தது. இதனால் சங்க பணிகள் மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை தமிழக அரசு தனியே நியமித்தது. இதை எதிர்த்து விஷால் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த வார வழக்கு விசாரணையில் பதவி உயர்வு பெற்று பணிமாறுதலில் சேகர் சென்று விட்டதாகவும், மஞ்சுளா புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதற்கு விஷால் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததோடு கடுமையாக வாதிட்டது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமையில் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், தயாரிப்பாளார் சங்கத்துக்கு 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும், அந்த தேர்தலை நடத்த தனி அதிகாரி செயல்படுவார் என கூறினார்.

இந்நிலையில் தனி அதிகாரியை நியமிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என விஷால் தரப்பு கூற கடைசியில் வரும் ஜூன் 30 ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

மேலும் இதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

loading...