Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Haters-க்கு பதிலடி கொடுத்த விஜய்! குட்டி கதை வீடியோவில் இந்த போட்டோவை கவனித்தீர்களா?

மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டி கதை' பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அது இணையத்தில் மிகவேகமாக வைரலாகி வருகிறது.

அதில் விஜய் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் தான் வரிகள் இருக்கிறது. மேலும் தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் உள்ளது அது.

ஒரு காட்சியில் 'Dont be the person spreading Hatred' என குறிப்பிட்டு, அதில் இருப்பவரை காவி நிறத்தில் காட்டியுள்ளனர். அதனால் விஜய்க்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுத்திவரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தான் விஜய் பதிலடி கொடுத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

மேலும் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, பொருளாதார வீழ்ச்சி, கரோனா என பல பிரச்சனைகள் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

loading...