Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தி மார்க்கெட்டில் பிரம்மாண்ட தொகைக்கு விலைபோன ஜெய்யின் சூப்பர்ஹீரோ படம்! இத்தனை கோடியா?

நடிகர் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பிரேக்கிங் நியூஸ். இது ஒரு வித்யாசமான சூப்பர்ஹீரோ படம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தினை ஆன்ட்ரூஸ் பாண்டியன் என்பவர் இயக்கி வருகிறார். மே மாதம் பட திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமையை 1.8 கோடி ரூபாய்க்கு ஒரு பிரபல விநியோகஸ்தர் வாங்கியுள்ளார். பொதுவாகவே தென்னிந்திய படங்களுக்கு ஹிந்தியில் டிவி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஜெய்யின் இந்த படம் மிக பிரம்மாண்ட தொகைக்கு விலைபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.

80% படம் VFX காட்சிகள் இருக்கும் எனவும் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது, படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.