Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து! 3 பேர் பலி, பலர் காயம் - அதிர்ச்சி புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் எப்போதும் பிரம்மாண்டமாக படங்கள் எடுப்பவர். தற்போது அவர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக இரவில் படமாக்கப்பட்டு வருகிறது.

இன்று அங்கு ஒரு பெரிய விபத்து நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. கிரேன் மீது பொருத்தப்பட்டிருந்த லைட் கிரேனோடு விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கிட்டத்தட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்தி வந்துள்ளது.

இது சினிமா துறையில் உள்ளவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.