Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்றைய விபத்து மிகக் கொடூரமானது.. நடிகர் கமல் இரங்கல் செய்தி

இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து சினிமா துறையினரை நிலைகுலையவைத்துள்ளது.பிரபலங்கள் பலரும் இறந்த 3 பேருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கோர விபத்து பற்றி கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இன்றைய விபத்து மிகக் கொடூரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என கமல் ட்விட் செய்துள்ளார்.