Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடர் உயிர் பலிகள்! இதற்கு முன் எத்தனை பேர் தெரியுமா! வெளியானது படப்பிடிப்பு தள ரகசியம்

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படப்பிடிப்பு தளம் சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் அமைந்துள்ளது. கடந்த 2012 ல் இந்த இடம் பொழுது போக்கு பூங்கா இடமாக இருந்தது.

இதில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து இப்பூங்கா மூடப்பட்ட பின்னரே படப்பிடிப்பு தளமாக மாறியுள்ளது.

கடந்த 2012 ல் இந்த இடத்தில் இளம் பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து செப்டம்பரில் தண்டையார் பேட்டை சேர்ந்த சிறுவன் சறுக்கு விளையாட்டில் தவறி விழுந்து உயிர் தப்பியுள்ளான.

அதே போல 2012 ல் அக்டோபர் மாதம் நாகலாந்தை சேர்ந்த அபியே மேக் என்ற விமான பணிப்பெண் ஆக்டோபஸ் ராட்டினத்தில் தவறி விழுந்து இறந்ததும் இதே இடத்தில் தான்.

இது போன்ற சம்பவங்களால் படப்பிடிப்பு தளமாக்கப்பட்ட இந்த இடத்தில் தனியார் டிவி சானல் நடத்திய நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் தற்கொலை முயற்சியும் செய்துள்ளனர்.

மேலும் ரஜினியின் காலா படப்பிடிப்பின் போதும் இதே இடத்தில் வட மாநில இளைஞர் மின்சாரம் தாக்கில் பலியானார். மற்றொருவர் கீழே விழுந்து இறந்தார்.

அதே போல விஜய்யின் பிகில் படத்தின் போதும் கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் இறந்து போன சம்பவமும் இதே இடத்தில் தான் நடைபெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 2 சமயத்தில் அரியலூரை சேர்ந்த ஏசி மெக்கானிக் குணசேகரன் என்பவர் இதே இடத்தில் விபத்தில் காலமானார்.