Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவுக்கு அடுத்து கிடைத்த பிரம்மாண்ட படவாய்ப்பு

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் வருகிறது என்றும் செய்திகள் அடிக்கடி வருகிறது.

நடிகர் கார்த்தி அடுத்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாளவிகாவை அனுகியுள்ளனர் என கூறப்படுகிறது. இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களுக்கு பிறகு பிஎஸ் மித்ரன் இயக்கும் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு உள்ளது.

இதற்குமுன்பு கார்த்தியை வைத்து தேவ் என்ற படத்தை தயாரித்த அதே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

loading...