Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று படத்தை வாங்கிய முக்கிய தொலைக்காட்சி நிறுவனம்!

சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று படம் வரும் ஏப்ரல் 10 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் டெக்கான் நிறுவன அதிபரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக சுதா கோங்குரா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சூர்யாவே இப்படத்தை தயாரித்துள்ளார். அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விமானத்தில் பறந்த படியே வெய்யோன் சில்லி பாடலை இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் வெளியிட்டார்.

எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது கூடியிருக்கும் இவ்வேளையில் தற்போது படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.


loading...