ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
சென்சார் போர்டு பல காட்சிகளை நீக்கிய நிலையில், அதன் பிறகு இறுதியாக பல போராட்டங்களுக்கு பிறகு A சான்றிதழ் வாங்கியுள்ளனர்.
இந்த படம் ஜனவரி இறுதியில் ரிலீஸ் ஆகும் என முன்புகூறினார்கள், ஆனால் சில சிக்கல் காரணாமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது மார்ச் 6 ம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.